
File Photo
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 18 ஆம் திகதி அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை நாடு திரும்பியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நியூயோர் நகரில் இருந்து நேற்று புறப்பட்ட ஜனாதிபதி இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி, செப்டம்பர் 22 ஆம் திகதி ஐநா கூட்டத் தொடரில் உரையாற்றியதுடன், அங்கு அரச தலைவர்கள் பலரையும் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.