13 ஆவது திருத்தத்தினை அமுல்படுத்தி நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லுமாறு இந்தியா, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய விசேட பேட்டியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர், இலங்கையுடனான இந்தியாவின் உறவு தனித்துவமானது என்று கூறியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் ‘அயலுறவுக்கு முதலிடம்’ கொள்கையின் பிரதான இலக்காக, இலங்கை முழுவதும் சிறப்பான அபிவிருத்திக்கான இருவழி ஈடுபாடு அமைவதாகவும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.