இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை இலங்கை வந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை அவர், கண்டி தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன், பின்னர் திருகோணமலைக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அவர், இந்திய நிதி உதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ். கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.
அவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் சென்றிருந்தனர்.
இதன்போது யாழ். கலாசார மத்திய நிலைய வளாகத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.