விவசாயிகளின் பிரச்சனைகளை நேரடியாகச் சென்று ஆராயும் நடவடிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்துள்ளார்.
இதன்படி விவசாயிகளை சந்திக்கும் முதலாவது நிகழ்வு இன்று ஹம்பாந்தோட்டை, லுனுகம்வெஹெர, அக்போபுர விவசாயிகளுடன் இடம்பெற்றது.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இதன்போது உர நெருக்கடியால், அதிக எண்ணிக்கையிலான பயிர்ச்செய்கை நிலங்களில் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விலகியுள்ளனர் எனவும் இதன்போது தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, விவசாயிகள் தங்கள் அறுவடைகளை விற்பனை செய்வதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது இதற்கு தீர்வு காண அரசாங்கத்திடம் உறுதியான வேலைத்திட்டம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.