File Photo
சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கும் தொழிற்சங்கப் போராட்டம் 84 நாட்களை கடந்துள்ள போதும், அரசாங்கம் இன்னும் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமையிலேயே அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும், ஆனால் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமாயின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்தச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும், இதனை வலியுறுத்தி எதிர்வரும் 6 ஆம் திகதி உலக ஆசிரியர் தினத்தில் நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கியதாக ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் கூறியுள்ளார்.