July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெடுஞ்சாலைகளின் ஊடான ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளின் ஊடாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கை இணைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்பார்ப்பதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியப் பணிப்பாளர் கெனிச்சி யோக்கோயமா உடனான சந்திப்பின் போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், வீதி பாதூகாப்பு, போக்குவரத்து நெரிசல் முகாமைத்துவ திட்டமொன்றை புதிதாக ஆரம்பித்தல் மேலும் புதிய வீதி அபிவிருத்தித் திட்டங்களைகளை ஆரம்பித்தல் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இவ்வேளையில் கூறியுள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பிரதேச வீதிகளை நெடுஞ்சாலை ஊடாக இணைப்பதன் மூலமாக நாட்டை அபிவிருத்தியின் உச்சத்திற்கு கொண்டு செல்ல ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு கிராமிய வீதி அபிவிருத்தி செயற்பாடுகள் வாயிலாக கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு உந்துசக்தி அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தற்போது இலங்கையில் வீதி அபிவிருத்தி முன்னேற்றம் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதால் எதிர்காலத்தில் இலங்கைக்கு உதவ ஆசிய அபிவிருத்தி வங்கி மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக, அந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்காக பணிப்பாளர் சொன் வொன் கூறியுள்ளார்.