இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, திருகோணமலையிலுள்ள எண்ணெய் குதங்களை பார்வையிட்டுள்ளார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை இலங்கை வந்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை அவர் கண்டி தலாதா மாளிக்கைக்கு சென்று வழபாட்டில் ஈடுபட்ட பின்னர், திருகோணமலைக்கு பயணமானார்.
அங்கு அவர், இந்தியா வசம் இருக்கும் எண்ணெய் குதங்களை பார்வையிட்டதுடன், அதன் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை இலங்கை – இந்தியாவின் எரிச்சக்தி பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து அவர் திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணமானார்.