July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மதுவால் இலங்கையில் நாளொன்றுக்கு 55 மரணங்கள் பதிவாகின்றன”

மதுபானத்தால் இலங்கையில் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதேவேளை மதுபான பாவனையால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்காக ஒரு மணித்தியால;திற்கு இரண்டு கோடி ரூபாய் வரையான செலவை சுகாதாரப் பிரிவு செலவிடுவதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கொவிட் தொற்றுப் பரவல் காலத்தில் நாட்டில் மதுபான பாவனையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 15 முதல் 24 வயதிற்கிடைப்பட்டவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகின்றமை பாரதூரமான பிரச்சினை எனவும், இதனை தடுக்க வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மது ஒழிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு கலால் திணைக்களம் நடவடிக்கையெடுத்துள்ளது.