January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வவுனியாவில் வீதியால் செல்பவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர்குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மதுபோதையில் நின்றிருந்த குறித்தநபர்கள், வீதியால் செல்பவர்களை தாக்கியதுடன் , வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனால் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திலீபனுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்துள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளார்.

This slideshow requires JavaScript.