இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளியுறவுச் செயலாளர் நேற்று மாலை இலங்கை வந்தார்.
எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா, இன்று காலை கண்டி தலதாமாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.
அத்துடன் இன்றைய தினத்தில் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கும் அவர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை நாளைய தினம் அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Foreign Secretary @harshvshringla begins his visit by seeking blessings at Sri Dalada Maligawa. He was received warmly by Hon'ble Diyawadana Nilame of the temple.@MEAIndia @AhciKandy pic.twitter.com/W7uxjat7Vv
— India in Sri Lanka (@IndiainSL) October 3, 2021