இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 55 மரணங்கள் பதிவாகியுள்ளன.
ஒக்டோபர் முதலாம் திகதி இந்த மரணங்கள் பதிவாகியள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,019 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்றைய தினத்தில் இதுவரையான காலப்பகுதியில் 855 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 519,374 ஆக உயர்வடைந்துள்ளது.
எவ்வாறாயினும் தொற்றில் இருந்து இதுவரையில் 458,646 பேர் இதுவரையில் பூரண குணமடைந்துள்ளனர்.
நாட்டில் தற்போது தினசரி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் மற்றும் மரணங்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.