
இலங்கையில் இந்த மாதத்தினுள் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்குச் செல்ல ஆர்வமாக உள்ள மாணவர்களின் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான சுகாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புகளை அரசாங்கம் ஆசிரியர்கள், பெற்றோரிடம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிட முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.