ஜப்பான் நாட்டின் தற்பாதுகாப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
அதற்கமைய ‘முரசாமே’, ‘காகா’ மற்றும் ‘புயுசுக்கி’ ஆகிய மூன்று பாரிய கப்பல்கள் இன்று இலங்கை வந்துள்ளதுடன், அதனை இலங்கையின் கடற்படையினர் வரவேற்றுள்ளனர்.
பசுபிக் வலயத்தின் ஏனைய நாடுகளுடன் இருதரப்பு பயிற்சியை முடித்துக்கொண்டு அவுஸ்திரேலியாவில் இருந்து இந்தக் கப்பல்கள் இலங்கை வந்துள்ளன.
இவை இலங்கை கடற்படையுடன் இணைந்த கடற்படை பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கப்பல்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படவுள்ளன.
இதேவேளை கப்பல்களின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பம் என ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/srilanka_navy/status/1444277644829216772