
பஹந்துடாவ ஆபாச வீடியோ சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர்களுக்கான நீதிமன்ற தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் ஆபாச வீடியோ வெளியிட்ட நபர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர், பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர்களுக்கு 10 ஆயிரத்து 800 ரூபாய் தண்டப் பணமும் 7 வருடங்கள் வரை ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
எல்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணும் மகரகம பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபரும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.