April 30, 2025 9:44:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

களுவாஞ்சிக்குடி பகுதியில் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் கைது!

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குடும்பச் சண்டை காரணமாக 31 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 39 வயது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்

கணவன் வெளிநாடு சென்று கடந்த 18 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ள நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் தொடர்பாக, கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் 38 வயதுடைய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தடயவியல் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டு விரிவான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.