
வெள்ளைப்பூடு மோசடிக்கு அரச தரப்பிடம் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடி சம்பவத்துக்கு தன்னைத் தொடர்புபடுத்தும் சதித் திட்டம் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் தனக்குத் தொடர்பில்லாத எந்தவொரு விடயம் தொடர்பாகவும் தான் கருத்து வெளியிடுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளைப்பூடு மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அமைச்சர் பந்துலவிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.