
மகாத்மா காந்தியின் 153 ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது, யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத் தலைவர், யாழ் மாநகர முதல்வர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.