May 25, 2025 8:28:26

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு 8 இலட்சம் பைசர்- பயோன்டெக் தடுப்பூசிகளை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க மக்களின் நன்கொடையாக இலங்கைக்கு 8 இலட்சம் பைசர்- பயோன்டெக் தடுப்பூசிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நேற்று இந்த தடுப்பூசிகளை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வழங்கி வைத்தார்.

இந்த தடுப்பூசிகள் உயிர்களைக் காப்பாற்றும் இலங்கையின் முயற்சிக்கு ஒத்துழைப்பாக அமையும் என்று அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த தடுப்பூசி தொகையுடன் இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 2.4 மில்லியனாக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா இலங்கைக்கு அவசர விநியோகங்களுக்காக 17.9 மில்லியன் டொலர் நிதி உதவியும் வழங்கியுள்ளது.