கடன் மற்றும் தவணைக் கட்டணத்தை செலுத்தாத வாகனங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை அடுத்த 6 மாங்களுக்கு நிறுத்துமாறு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான 6 மாத பொருளாதார திட்டத்தை வெளியிட்டு உரையாற்றும் போது மத்திய வங்கி ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எதிர்வரும் 6 மாத காலத்தில் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று நிலைமையில் வியாபாரிகளுக்கு அதிக கடன் செலுத்த வேண்டியுள்ளதால் அதற்கான நிவாரணங்களை வழங்குவதற்கு 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“கல்வி மற்றும் சுகாதார தேவைகளுக்காக பணத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் அனைவருக்கும் அந்தப் பணத்தை வழங்குவதற்காக செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.
ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் விசேட வரிச் சலுகையை வழங்கவும் நடவடிக்கையெடுக்கும். ஏற்கனவே 28 வீத வரியை 15 வீதமான குறைத்துள்ளோம்” என்றும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பணப் பரிமாற்ற அனுமதிப் பத்திரங்களை மீள வழங்க எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.