May 24, 2025 10:45:51

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு

இலங்கையின் அம்பாறை மாவட்டம், கல்முனைக்குடி –  கடற்கரைப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் கோழிக்குஞ்சொன்று பிறந்துள்ளது.

வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்தே இவ்வாறு நான்கு கால்களை உடைய கோழிக்குஞ்சு பிறந்துள்ளது.

மேலும் ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது என வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பிறந்து 2 நாட்களேயான இந்த கோழிக்குஞ்சை பார்வையிட அயலவர்கள் ஆவலுடன் வருகைத்தருகின்றனர்.