
சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் விளக்க மறியல் எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயதான ஹிஷாலினி என்ற சிறுமி தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்பில் இன்று அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரின் விளக்க மறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் கடந்த தவணை விசாரணையின் போது பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.