February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊஞ்சல் கயிறு இறுகியதால் 10 வயது சிறுமி மரணம்!

File Photo

மாத்தளை மாவட்டம், நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணுமுலுயாய பிரதேசத்தில் ஊஞ்சல் கயிறு இறுகியதில் 10 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமி, நாற்காலியின் உதவியுடன் தனது வீட்டிலுள்ள கூரை சட்டத்தில் புடவையால் ஊஞ்சல் கட்டி விளையாடியுள்ளார்.

இதன்போது நாற்காலி விலகியதால் ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை தம்புள்ளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதுடன் இது தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.