May 13, 2025 22:05:30

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போனோரின் உறவினர்கள் யாழ். ஐநா அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அண்மையில் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவர்கள் பலர் காணாமல் போயுள்ள நிலையில், இந்த சிறுவர் தினம் கறுப்பு தினமே என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.