இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு அவ்வாறே தொடரும் என்பதுடன், நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் தினமும் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.
கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொவிட் தொற்றுப் பரவல் நிலைமை சற்று குறைவடைந்துள்ளதால், இன்று முதல் நாட்டை கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
நாட்டை திறந்தாலும், ஒன்று கூடல்கள், கூட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களுக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி நடந்துகொள்ளுமாறு அதிகாரிகள் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.