
இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு காலையில் பால் கோப்பை ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மிகவும் பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கோப்பை திரவப் பால் வழங்கும் நோக்கத்துடன் ஆறு சிறிய அளவிலான பால் பதப்படுத்தும் மையங்களை அமைக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பால் பதப்படுத்தும் மையங்கள் பிரான்ஸ் நாட்டின் நிதி உதவியுடன் 13.9 மில்லியன் யூரோ செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த ஆறு மையங்களிலும் நாளொன்றுக்கு 5 ஆயிரம் லீட்டர் வீதம் 30 ஆயிரம் லீட்டர் பால் பதப்படுத்தப்படும் என்று விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறினார்.