இலங்கையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இரவுநேர பயணக் கட்டுப்பாடுகள் தொடரும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் ஒழுங்குவிதிகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வீட்டில் இருந்து வெளியேறி, பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், அத்தியாவசிய தேவைகளுக்காக இரவு நேரத்தில் பயணங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை தொடர்வதற்கும் சுகாதார தரப்பு தீர்மானித்துள்ளது.