
இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா, ஒக்டோபரில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக ஐக்கிய நாடுகள் பொது கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய – இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கைப் பயணம் முக்கியத்துவமானதாக பார்க்கப்படுகின்றது.
இலங்கை வரும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர், இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தில் உருவான புதிய திட்டங்களை தொடக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா உதவியுடன் இலங்கையில் நடைபெற்று வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆராயப்படும் என தெரிகிறது.