July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க 7 நிறுவனங்கள் முன்வந்துள்ளன’: சுற்றுலாத்துறை அமைச்சர்

இலங்கைக்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க 7 விமான சேவை நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

7 விமான சேவை நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கான நேரடி பயணங்களை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் ஏரோபோல்ட், அஸ_ர் எயார் ஆகிய விமான சேவைகளும், இத்தாலியின் நியோஸ் விமான சேவையும், பிரான்ஸின் எயார் பிரான்ஸ் விமான சேவையும் இலங்கைக்கு நேரடி பயணங்களை ஆரம்பிக்கவுள்ளன.

பங்களாதேஷின் யுஎஸ் பங்களா எயார்லைன்ஸ் நிறுவனம் நவம்பர் மாதம் 1 ஆம் திகதியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான நேரடி பயணத்தை ஆரம்பிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேலின் அர்கியா விமான சேவை மற்றும் சுவிட்சர்லாந்தின் சுவிஸ் எயார் விமான சேவை ஆகியனவும் இலங்கையுடன் நேரடி சேவைகளை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.

ஐரோப்பாவின் குளிர் காலத்தின் போது இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பதன் நோக்கம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.