July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு எதிரான பழிவாங்கல் குற்றச்சாட்டுக்களை ஆவணப்படுத்தியது ஐநா

இலங்கைக்கு எதிரான பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்களை ஐநா பொதுச் செயலாளர் ஆவணப்படுத்தியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக 45 நாடுகளில் வசிக்கும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என 240 பேர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களையே ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆவணப்படுத்தியுள்ளார்.

பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆவணப்படுத்தப்பட்ட அறிக்கையை மனித உரிமைகளுக்கான ஐநா உதவிச் செயலாளர் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸ், ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான பழிவாங்கல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்காணிப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.