June 12, 2025 14:53:50

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேலும் ஒருதொகை ‘பைசர்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

அமெரிக்காவில் இருந்து மேலும் தொகை ‘பைசர்’ தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்துள்ளன.

‘கொவெக்ஸ்’ திட்டத்தின் கீழ் 408,650 பைசர் தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

ஒரே தடவையில் அதிகளவான பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.