மனித உரிமை கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் ஏப்ரல் மாதமளவில் 500 மில்லியன் டொலர் பெறுமதியான ஐரோப்பிய ஏற்றுமதி வர்த்தக சலுகைகளை இலங்கை இழக்க நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் மாத தீர்மானத்தின் அடிப்படையில் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை விலக்கிக் கொள்வது என ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே தீர்மானித்துவிட்டது என தான் கருதுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கு சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அடுத்த வருடம் ஏப்ரலில் ஜி.எஸ்.பி வரிச்சலுகையை அரசாங்கம் இழக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.