February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு திறக்கப்பட்டாலும் ரயில் சேவைகள் இயங்காது!

ஒக்டோபர் முதலாம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், அடுத்த இரண்டு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அத்தோடு மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துகளுக்கான தடையும் தொடர்ந்து அமுலில் இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பொது போக்குவரத்துகளுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறினார்.

எவ்வாறாயினும் ஒக்டோபர் 1 ம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டதன் பின்னர் வழமைபோன்று மாகாணங்களுக்கு உள்ளே பஸ் போக்குவரத்துகள் இயங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.