(Photo : Facebook /NLB )
இலங்கையில் கடந்த 41 நாட்களாக அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு காரணமாக தேசிய லொத்தர் சபைக்கு 300 கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் பியும் பெரேரா தெரிவித்துள்ளார்.
அரசுக்கு வருமானம் ஈட்டும் நிறுவனமான தேசிய லொத்தர் சபைக்கு ஏற்பட்டுள்ள இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது எனவும் இது மிகவும் தீவிரமான சூழ்நிலை எனவும் லலித் பியும் பெரேரா குறிப்பிட்டார்.
அத்தோடு, ஊரடங்கு காரணமாக தேசிய லொத்தர் சபையின் 25,000 விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நாட்டை திறந்த உடன் லொத்தர் சந்தையை திறப்பது அரசாங்கம் மற்றும் விற்பனையாளர்களுக்கு நிவாரணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.