January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்டோபரில் இலங்கை வருகிறது பாகிஸ்தான் அணி

Photo: Pakistan Cricket

பாகிஸ்தான் ‘ஏ’ அணி அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்த பயணத்தின் போது, இலங்கை ‘ஏ’ அணியுடன்  நான்கு நாட்களை கொண்ட இரண்டு  போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் ‘ஏ’ அணி விளையாடவுள்ளது.

இப் போட்டிகள் அனைத்தும் கொவிட்-19 கட்டுப்பாட்டுடனேயே நடத்தப்படவுள்ளன.

இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது 4 நாள் போட்டி ஒக்டோபர் 28ஆம் திகதி ஆரம்பமாவதுடன், இரண்டாவது 4 நாள் போட்டி நவம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகும்.

இந்த இரண்டு போட்டிகளும் கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 10, 12, 15 ஆம் திகதிகளில் நடைபெறும். இப் போட்டிகள் எங்கு நடைபெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பாகிஸ்தான் ‘ஏ’ அணி இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.