July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைக்கு பாதகமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டேன்’: அமைச்சர் கம்மன்பில

இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் விடயத்தில் நாட்டுக்குப் பாதகமான எந்தவொரு உடன்படிக்கையிலும் தான் கைச்சாத்திடப் போவதில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

வலு சக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு 2028 ஆம் ஆண்டு வரை எரிவாயு விநியோகிக்கும் பொறுப்பை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவது இலங்கையில் எரிவாயு அகழ்வு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2025 ஆம் ஆண்டாகும் போது எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என்று உதய கம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

எரிவாயு விநியோகத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதன் பாதகங்களை தாம் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதைவிட எரிவாயு விநியோகத்தை ஐந்து வருடங்களுக்கு வழங்குவதே பாதகமான திட்டமாகும் என்று கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.