February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியொன்று தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கம்!

இலங்கையில் தேவாலயங்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என சமூக வலைத்தளங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பரவி வரும் செய்தியொன்று தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு, குறித்த செய்தி பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டதோ அல்லது உறுதிப்படுத்தப்பட்டதோ அல்ல என்று தெரிவித்துள்ளது.

எனவே, இவ்விதமான அடிப்படையற்ற தகவல்கள் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.