சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கடத்தப்பட்ட 1500 கிலோ மஞ்சள் கட்டிகள் யாழ்ப்பாணம், பாசையூர் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப் பொதி செய்யப்பட்டு அவை கடத்திவரபட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மஞ்சளை கடத்தி வந்தனர் என்ற குற்றச்சாட்டில் பாசையூரைச் சேர்ந்த 64 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டிகள், யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் சுங்கதிணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.