இலங்கைக்கான ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை ஆராய்ந்து, ஜிஎஸ்பி வரிச் சலுகையை நீடிப்பது தொடர்பாக கவனம் செலுத்துவதற்காகவே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் விஜயம் செய்துள்ளனர்.
மனித உரிமைகளை மீறும் நாடுகளில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புதிய கொள்கை ஒன்று பின்பற்றப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்க அழுத்தம் கொடுத்தாலும், வரிச் சலுகையை நீக்க வேண்டாம் என்று சஜித் பிரேமதாஸ கேட்டுக்கொண்டுள்ளார்.