
ஒக்டோபர் முதலாம் திகதிக்கு பின்னர் இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்திய பின்னர் அரச ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படவுள்ளனர்.
சுகாதார ஒழுங்குவிதிகளுடன் அவர்களை பணிக்கு அழைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான அறிவித்தல், கூடிய விரைவில் அரச சேவைகள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை தனியார் துறையினரை பணிக்கு அழைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி பஸ், ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைப் போன்று முன்னெடுப்பதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நாட்டை திறப்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினத்திற்குள் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.