
File Photo
நடுக்கடலில் தத்தளித்த சோமாலியா நாட்டு மீனவர்கள் நான்கு பேர், இலங்கை மீனவர்களினால் காப்பற்றப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் பேருவளை மீனவ துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோமாலியாவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ள குறித்த நன்கு மீனவர்களும், நடுக்கடலில் படகு செயலிழந்த நிலையில் தத்தளித்துள்ளததாக கூறப்படுகின்றது.
இதன்போது கடந்த 8 ஆம் திகதி பேருவளை பகுதியிலிருந்து மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ள அந்த மீனவர்கள், இன்று அதிகாலை பேருவளை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் தொடர்பில் கடற்படையினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.