July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சுற்றுலாவுக்காக நாடு திறக்கப்படுமாயின் நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும்’

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு நாட்டை திறந்தவுடன் சகல செயற்பாடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது. குறிப்பாக சுற்றுலாவுக்காக நாடு திறக்கப்படுமாயின் நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளும் நாடுகளில் மிக மோசமான வைரஸ் பரவல்கள் காணப்படுகின்றன. அதேபோல், தென்னாபிரிக்க வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவிக்கொண்டுள்ள நிலையில், நாம் தடுப்பூசியை நம்பி நாட்டை திறக்க முன்னர் நாட்டில் இறுக்கமான சுகாதார கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .

இலங்கையர்கள் நாட்டில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வேளையில் கண்டிப்பான சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல், வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்ற நிலையிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.