ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் நாட்டுக்குள் வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளின் படி முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டிற்கு வருகை தருவதாயின் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
அத்தோடு குறித்த பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின், இலங்கை வந்ததன் பிறகு அவருக்கு மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மத்தள மற்றும் கட்டுநாயக்க உள்ளிட்ட இரு சர்வதேச விமான நிலையங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டுக்கு வரும் இலங்கை பிரஜைகள் மற்றும் இரட்டைக் குடியுரிமையை கொண்டவர்கள் வெளிநாட்டு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.