அரிசி ஆலை உரிமையாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ள அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் அதிருப்தியடைந்துள்ளது.
இந்த விலைகளானது நியாயமற்றது என நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அரிசி விலைக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததை தொடர்ந்து, அரிசி ஆலை உரிமையாளர்களினால் அரிசி வகைகளுக்கான புதிய விலைப் பட்டிலொன்று இன்று வெளியிடப்பட்டது.
இதன்படி ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபாவுக்கும் விற்பனை செய்ய உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த விலை அதிகரிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்லவெனவும், நியாயமற்ற வகையில் விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குறிப்பிட்டுள்ளார்.