இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் இன்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதில் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்குபற்றியுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கமளித்துள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.