கொழும்பு மாநகர ஆணையாளர் மொஹமட் ரம்சி கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலை செய்யக்கட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் பொருளாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டியேலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், 50 ஆயிரம் ரூபாய் பணப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் பொருளாளரை அச்சுறுத்திய சம்பவத்துக்கு எதிராக மாநகர ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.