ஊடகவியலாளர் சீஐடிக்கு அழைக்கப்படக் கூடாது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சதொச நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வெள்ளைப்பூடு மோசடி சம்பவம் தொடர்பான பத்திரிகை செய்திகள் குறித்து, சில ஊடக நிறுவனங்களை சேர்ந்தோர் சீஐடிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த விடயம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இது நடக்கக் கூடாதது என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமரிடம் கேட்ட போது, அவ்வாறு சீஐடிக்கு அவர்கள் அழைக்கப்படக் கூடாது என்று அவர் கூறியுள்ளார் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.