நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதி அரசாங்கத்திடம் இருக்கிறது எனவும் இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று சந்தேகம் கொள்ளவோ அல்லது வீண் அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்ட பின்னர், எரிபொருள் கொள்வனவுக்குத் தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.