
இலங்கையில் அரிசி ஆலை உரிமையாளர்கள், அரிசி வகைகளுக்கான புதிய சில்லறை விலைகளை அறிவித்துள்ளனர்.
கடந்த 2 ஆம் திகதி அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயித்து வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவை நேற்று (27) ரத்து செய்திருந்த நிலையிலேயே இந்த புதிய விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் ஒரு கிலோ நாட்டரிசி 115 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 165 ரூபாவுக்கும் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதேவேளை ஒரு கிலோ சம்பா நெல்லை 70 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல்லை 80 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யவுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.