January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு பங்குச் சந்தை பரிவர்த்தனையில் வரலாற்று உயர்வு!

Stock Exchange Common Image

கொழும்பு பங்குச் சந்தையின் பங்குப் பரிவர்த்தனை விலைச் சுட்டி (ASPI) வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு இன்று உயர்வான புள்ளிகளை பதிவு செய்துள்ளது.

இதன்படி இன்றைய பரிவர்த்தனை முடிவில், அனைத்து பங்குகளின் விலைச் சுட்டி 9,339.28 புள்ளிகளாக காணப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் 2021 செப்டம்பர் 2 ஆம் திகதி அன்று அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டி 9,335.98 என்ற புள்ளிகளை பதிவு செய்திருந்தது.

அதனை விடவும் அதிகளவான புள்ளிகள் இன்று பதிவாகியுள்ளன.

இதேவேளை அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டி நேற்றைய தினத்தை விடவும் இன்று 69.63 புள்ளிகளால் உயர்வடைந்துள்ளது. இது 0.75 வீத உயர்வாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை S&P SL20 விலைச் சுட்டியிலும் குறிப்பிடத்த அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய பங்குளின் மொத்த புரள்வின் பெறுமதி 6.66 பில்லியன் ரூபாவாகும் என்று கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது.