January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்கமறியல் நீடிப்பு!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் விளக்க மறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அசாத் சாலி, தற்போது கொழும்பு  தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் நிலையில்  இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில்  இனரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் 16ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினால் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அசாத் சாலியால் இந்த மாத தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.